திருப்பத்தூர்:வேலூர் காட்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவைக் காணொலி காட்சி வாயிலாகத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பள்ளி கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் அரவை மற்றப்பள்ளி பகுதியில் 1971 ஆம் ஆண்டு கட்டப்பட்டு சுமார் 52 வருடங்களாக இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள கட்டிடத்தை இடித்து மீண்டும் புதுப்பிக்க சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.