'நமது வாக்கு நமது உரிமை வாக்களிப்பது நமது கடமை'
100% வாக்களியுங்கள்: 'நமது வாக்கு நமது உரிமை வாக்களிப்பது நமது கடமை' - Tiruppattur district collector
திருப்பத்தூர்: 'நமது வாக்கு நமது உரிமை வாக்களிப்பது நமது கடமை' என்ற தலைப்பில் மகளிர் குழு பெண்கள் நடத்திய தேர்தல் விழிப்புணர்வுப் பேரணியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் இன்று (மார்ச் 3) கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
![100% வாக்களியுங்கள்: 'நமது வாக்கு நமது உரிமை வாக்களிப்பது நமது கடமை' http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/03-March-2021/10852921_611_10852921_1614778337781.png](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10852921-611-10852921-1614778337781.jpg)
http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/03-March-2021/10852921_611_10852921_1614778337781.png
100% வாக்களியுங்கள்: 'நமது வாக்கு நமது உரிமை வாக்களிப்பது நமது கடமை'
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டிய கடமையை வலியுறுத்தி, 'நமது வாக்கு நமது உரிமை வாக்களிப்பது நமது கடமை' என்ற தலைப்பில் தேர்தல் விழிப்புணர்வுப் பரப்புரைப் பேரணியை மகளிர் குழு பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தூய நெஞ்சக் கல்லூரி வரை நடத்தினர். இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவனருள் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில் 100-க்கும் மேற்பட்ட மகளிர், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தி, 'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்ற கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாகச் சென்றனர்.
மகளிர் குழு பெண்கள் நடத்திய தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சிவனருள் பேசுகையில், "100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும், வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்று வலியுறுத்தி அச்சமின்றி 100 விழுக்காடு வாக்களியுங்கள், அனைவரும் வாக்குச்சாவடிக்குச் சென்று 100 விழுக்காடு வாக்கைப் பதிவிடுங்கள், அனைவரும் அவரவர் கிராமங்களில் வீட்டுப் பக்கத்தில் உள்ள நபர்களுக்குத் தேர்தல் குறித்தும், வாக்களிப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்' என்று அறிவுறுத்தினார்.
மகளிர் குழு பெண்கள் நடத்திய தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி