தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேங்காய் நார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து! - Tiruppattur Police

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான கயிறு தயாரிக்கும் நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் லாரி உள்பட 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்துள்ளன.

தீயை அணைக்கும் போது
தீயை அணைக்கும் போது

By

Published : Mar 2, 2021, 3:27 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் அனேரி தென்றல் நகர் பகுதியில், திருப்பதி என்பவருக்குச் சொந்தமான தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை ஐந்து வருட காலமாக செயல்பட்டுவருகிறது. இந்தத் தொழிற்சாலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவருகின்றனர்.

இத்தொழிற்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பத்தற்குள் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியும் எரிந்து நாசமானது.

தீ விபத்து ஏற்பட்ட தேங்காய் நார் தொழிற்சாலை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் எரிந்து நாசமானது.
தீயை அணைக்கும் போது
இது குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர், மின்கசிவு காரணமா? வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details