திருப்பத்தூர்: தமிழ்நாடு முழுவதும் ஓராண்டிற்குள் ஒரு லட்சம் விவசாய இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 16) காணொளி காட்சி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் இந்நிகழ்ச்சியை நேரலையில் காணும் வகையில் தூய நெஞ்சக் கல்லூரியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
விவசாயிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடல்: திருப்பத்தூரில் 250 விவசாயிகள் பங்கேற்பு
இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மு.க.ஸ்டாலின்
சென்னையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாடியது நேரலையாக ஒளிப்பரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பயனடைந்த 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 125 யூனிட் மின்சாரம் இலவசம் - சபாஷ் போடவைத்த அறிவிப்பு - எங்கே?