தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழா கொண்டாட்டம்! - Tirupathur district news

திருப்பத்தூர்: சோலையார் பேட்டையில் தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழா கொண்டாட்டம்
தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழா கொண்டாட்டம்

By

Published : Oct 3, 2020, 3:52 PM IST

அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் சோலையார் பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண வளாகத்தில், இந்த ஆண்டிற்கான தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அப்போது சிறப்பாக செயல்பட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கும், மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கும் அமைச்சர்கள் சான்றிதழ், கேடயம் ஆகியவற்றை வழங்கினர்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் கே.சி. வீரமணி, "அம்மாவின் திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் தேசிய ஊட்டச்சத்து திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோரை பாராட்டுகிறேன்.

ஏழு வருடங்களுக்கு முன்பு 100க்கு 18 என்று இருந்த குழந்தை இறப்பு விழுக்காடு, தற்பொழுது 9 ஆக குறைந்துள்ளது. ஆக்கப்பூர்வமான திட்டங்களை சரியாக கொண்டு போய் மக்களிடம் சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்திய பத்திரிகையாளர்களுக்கும் நன்றி" எனக் கூறினார்.

இதையும் படிங்க: மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details