தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் ஊராட்சி செயலாளர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம், கவுன்சிலரை கைது செய்யக்கோரி மறியல் - road stroke

என் சாவுக்கு திமுக ஒன்றிய கவுன்சிலர் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் ஊராட்சி செயலாளர். இந்த நிலையில், திமுக கவுன்சிலரை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்து உயிரிழந்த ராஜசேகரின் மனைவி மற்றும் உறவினர்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூரில் ஊராட்சி செயலாளர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம், உடலை வாங்க மறுத்து மறியல்
வேலூரில் ஊராட்சி செயலாளர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம், உடலை வாங்க மறுத்து மறியல்

By

Published : May 14, 2022, 5:31 PM IST

திருப்பத்துர்: ஒடுக்கத்தூர் அடுத்த இராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக இருந்தவர் அதே பகுதியை ராஜசேகர்(39). இவர் நேற்றிரவு (மே13) கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலையால் உயிரிழந்தார். அக்கடிதத்தில்,"மனைவி காந்திமதி என்னை மன்னித்துவிடு, நான் உன்னைவிட்டு போகிறேன். குழந்தையை பத்திரமா பார்த்துக்கொள், எனது இந்த முடிவுக்கு கவுன்சிலர் அரிதான் காரணம் வேறு யாரும் காரணம் இல்லை”, எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஊராட்சி வரும் நிதியை தனக்கு வழங்க வேண்டும் எனக் கவுன்சிலர் அரி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும். ராஜசேகர் தனது தம்பிக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கம் பெற்ற கவுன்சிலர் அரி வேலை வாங்கி தராமல் அலைக்கழித்ததாகவும். பணத்தை திரும்பி கேட்ட போது மிரட்டியதாகவும், ஒழித்துவிடுவேன், வேலையில் இருந்து தூக்கி விடுவேன் என கூறியுள்ளார்.

இதன் காரணமாக ஊராட்சி செயலாளர் ராஜசேகர் உயிரிழந்ததாக உறவினர்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வேப்பங்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராஜசேகரன் தற்கொலைக்கு காரணமான திமுக ஒன்றிய குழு உறுப்பினர் அரியை கைது செய்யக் கோரி உறவினர்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையம் எதிரே அரசு பேருந்தை சிறைபிடித்து சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பாதை மாற்றி விடப்பட்டுள்ளது.

திமுக கவுன்சிலரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
மேலும் சம்பவ இடத்தில் வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணன் நேரில் வந்து உயிரிழந்த ராஜசேகரின் மனைவி கோமதி இடம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க:குடும்ப தகராறில் கணவன் குடித்த விஷத்தை பிடுங்கி குடித்த மனைவி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details