கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் , முதல் வரிசை வீரர்களில் ஒருவராக தூய்மைப் பணியாளர்கள் நாள்தோறும் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு தன்னலம் கருதாது, அர்ப்பணிப்போடு பணி செய்து வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் 23ஆம் தேதி அறிவித்திருந்தது.
தூய்மைப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அணி அதன் அடிப்படையில் திருப்பூர், ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சுகாதார பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள், உடனடியாக சிறப்பு ஊதியத்தை வழங்க வேண்டும், தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை, ஒப்பந்தப் பணியாளர்களுக்கு நிலுவை சம்பளத் தொகையை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பணிகளில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க :'அரசுப் பள்ளிகளில் உள்ள உணவுப் பொருட்களைப் பாதுகாக்க வேண்டும்' - சென்னை மாநகராட்சி