திருப்பத்தூர்:ஆம்பூர் அருகே மோட்டுகொள்ளைப் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் நேற்று (ஏப்ரல்.1) இரவு இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்நிகழ்வை அதே பகுதியைச் சேர்ந்த தப்ரேஸ் அகமது, ரகமதுல்லா ஆகியோர் தட்டிக்கேட்ட போது இரு தரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலில் அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், அவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில் மோதல் தொடர்பாக ஆம்பூர் - மோட்டுகொள்ளைப் பகுதியைச் சேர்ந்த காதர் பாஷா மற்றும் ஏழுமலை ஆகியோர் அளித்தப்புகாரின் பேரில் சந்தோஷ்குமார், சரத்குமார், ரகமதுல்லா, சதீஷ்குமார், தப்ரேஸ் அகமது, ஆகிய 6 பேரை ஆம்பூர் நகர காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.