திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன். திமுக கிளை செயலாளராக இருந்த இவருக்கு இரு வேறு சமூகத்தினை சேர்ந்த இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி கமலா மற்றும் 2ஆவது மனைவி மலர் தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சின்னப்பன் உடல்நிலை சரியில்லாமல் நேற்று(செப்.18) காலை உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின் போது நடனம் ஆடுவது தொடர்பாக இரண்டு மனைவிகளின் உறவினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
இந்த கைகலப்பில் நான்கு பேர் காயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விரோதத்தில் சின்னப்பனின் பக்கத்து வீட்டுக்காரரான தாமோதரன் வீட்டை மலருடை உறவினர்கள் அடித்து நொறுக்கி அவரது மகன் இளவரசனை கத்தியால் குத்தியுள்ளனர்.