கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. நவம்பர் 10ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதித்தல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடித்து திரையரங்குகளைத் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
திரையரங்கை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள்...! - திரையரங்குகள் மீண்டும் திறப்பு
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் திரையரங்குகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
cinema
இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கின் ஊழியர்கள் திரையரங்குகளைத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் திருப்பத்தூர் மாவாட்டம் வாணியம்பாடியில் திரையரங்குகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர்.