திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் எலக்ட்ரீசியனாகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும், புவிமித்ரன் என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளது. இந்நிலையில், கார்த்திக் இன்று ( ஜூன் 6) காலை தனது வீட்டிற்கு அருகே உள்ள செல்வம் என்பவரின் புதிதாக கட்டி வரும் வீட்டில் எலக்ட்ரீசியன் பணிக்குச் சென்றுள்ளார்.
கார்த்திக் வேலைக்குச் செல்வதை பார்த்த குழந்தை அவர் பின்னாலேயே சென்றுள்ளது. இதைப் பார்க்காமல் கார்த்திக் புதிய வீட்டினுள் உள்பக்கம் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் புதிய வீட்டின் அருகில் வந்த குழந்தை வீட்டின் முன்பாக வெள்ளை நிற தார் பை கொண்டு மூடிய தண்ணீர் தொட்டியின் மீது நடந்து வந்துள்ளது.
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி! - தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்து பலி
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
அப்போது கால்தவறி குழந்தை 4 அடி தண்ணீர் தொட்டியினுள் விழுந்துள்ளது. வெகு நேரமாகியும் குழந்தையை காணமல் அங்குமிங்கும் தேடிய அவரது தாயார் தண்ணீர் தொட்டியின் பக்கம் வந்து பார்த்த போது, தண்ணீர் தொட்டியின் மீது வைக்கப்பட்ட தார் பை விலகியிருப்பதைக் கண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உமராபாத் காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.