தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்தியில் மோடி, மாநிலத்தில் ரஜினிகாந்த் ஆட்சி - அர்ஜுன் சம்பத் நம்பிக்கை! - imk party

திருப்பத்தூர்: மத்தியில் பிரதமர் மோடியும், மாநிலத்தில் ரஜினிகாந்தும் ஆளப்போகிறார்கள் என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் சம்பத் நம்பிக்கை
அர்ஜுன் சம்பத் நம்பிக்கை

By

Published : Sep 19, 2020, 3:24 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அடிவாரம் பொன்னேரி பகுதிக்கு இந்து மக்கள் கட்சியின் தேர்தல் பணி குழுவுக்கு, அக்கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் ஆலோசனை கூற வந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத், “ சாராய விவகாரத்தில் அதிமுகவும் திமுகவும் ஒன்று சேர்ந்தார் போல்தான் செயல்படுகிறார்கள். இளைஞர்களுக்கு வாய்ப்பு என்று கூறிக் கொண்டிருந்த திமுக, தற்பொழுது டிஆர் பாலுவையும் துரை முருகனையும் முன்னிறுத்தி செயல்படுகிறது.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கைதுசெய்ய இந்து மக்கள் கட்சி காரணமாக இருந்ததைப்போல, அரசியலிலும் மாற்றம் வர இந்து மக்கள் கட்சி காரணமாக இருக்கும்.

அர்ஜுன் சம்பத்

தமிழ்நாட்டை திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து கொள்ளையடித்தது போதும். இனி ஆன்மீக அரசியலை முன்னிறுத்தி, மத்தியில் மோடி மாநிலத்தில் ரஜினிகாந்த் மட்டுமே ஆளப்போகிறார்கள். அதற்காக தேர்தல் பணிக்குழு சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க...விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் உயிரிழந்த விவகாரம் - கைலெடுத்த மனித உரிமை ஆணையம் !

ABOUT THE AUTHOR

...view details