தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்களில் கைவரிசை: உண்டியலை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் - கோயில் உண்டியல் திருட்டு

நாட்றம்பள்ளி அருகே அடுத்தடுத்து இரண்டு கோயில்களில் மர்ம நபர்கள் உண்டியலை கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உண்டியல் கொள்ளை
உண்டியல் கொள்ளை

By

Published : Feb 15, 2023, 9:52 PM IST

உண்டியலை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள்

திருப்பத்தூர்:நாட்றம்பள்ளி அடுத்த பந்தரப்பள்ளியின் நெக்குந்தியன் வட்டம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று (பிப். 14) இரவு மர்ம நபர் ஒருவர் கோயிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தாலி மற்றும் உண்டியல் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

பின்னர் அதே பகுதியில் உள்ள மற்றொரு காளியம்மன் கோயிலில் இருந்த உண்டியலை உடைத்து, தூக்கி தோள்பட்டை மீது வைத்து நடந்து செல்லும் காட்சியும் அருகே உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று (பிப். 15) காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பொதுக்குழாயில் துணி துவைத்ததால் தகராறு; திமுக கவுன்சிலர் தாக்கியதால் ராணுவ வீரர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details