தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிராக்டர் மீது மோதிய இருசக்கர வாகனம்; பதரவைக்கும் சிசிடிவி காட்சி - bike accident

ஆம்பூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த தண்ணீர் டிராக்டர் மீது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற நபர் மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அதிவேகமாக வந்த பைக் தண்ணீர் டிராக்டர் மீது மோதும் பதரவைக்கும் சிசிடிவி காட்சி
அதிவேகமாக வந்த பைக் தண்ணீர் டிராக்டர் மீது மோதும் பதரவைக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Oct 11, 2022, 4:09 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம், பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த தண்ணீர் டிராக்டர் மீது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளாகி பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முதியவர் இருசக்கர வாகனத்தில் வந்து டிராக்டர் மீது மோதும் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி

இதையும் படிங்க:குட்டையில் மீன் பிடிக்கச்சென்ற 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details