தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூரில் 5 ஆண்டுகளாக வரி செலுத்தாத சிபிஎஸ்இ பள்ளிக்கு சீல் - CBSE school in Ambur

ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.

cbse-school-in-ambur-sealed-for-unpaid-tax-for-5-years
cbse-school-in-ambur-sealed-for-unpaid-tax-for-5-years

By

Published : Mar 21, 2022, 7:43 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட ஹரிநாத் நகரில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளி 2017 ஆம் ஆண்டு முதல் வரி செலுத்தாமல் செயல்பட்டுவந்துள்ளது. ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அப்படி 5 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் வரி பணம் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நேற்று ஆம்பூர் நகராட்சி ஆணையர் ஷகிலா தலைமையிலான அதிகாரிகள் பள்ளிக்கு சென்று, சீல் வைத்தனர். இந்த நடவடிக்கையின்போது, ஆணையருடன் பொறியாளா் ராஜேந்திரன், சுகாதார அலுவலா் ராஜரத்தினம், வருவாய் ஆய்வாளா் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனால் இன்று பள்ளிக்கு செல்லவிருந்த மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாக கடைகளுக்கு சீல் வைப்பு

ABOUT THE AUTHOR

...view details