திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்து அமைந்துள்ளது, எஸ்.என்.பாளையம். இந்தப் பகுதியில் நேற்று (ஏப்ரல். 02) நள்ளிரவில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருப்பதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர் நேரில் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது ஆம்பூர் தொகுதியின் திமுக வேட்பாளர் வில்வநாதனின் தம்பி மகன் மிட்டாளம் பகுதி கிஷோர், பூந்தமல்லியைச் சேர்ந்த பிரசன்னா ஆகிய இருவரும் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்த 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.