தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்கு கட்டாய தாலி... இளைஞர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு! - man arrest for child marriage issue

வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய இளைஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

vaniyambadi
வாணியம்பாடி

By

Published : Aug 9, 2021, 10:29 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(26), பெங்களூரில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த தந்தையை இழந்து தாயுடன் வசித்து வரும் உறவினரின் மகள் 14 வயது சிறுமியுடன், கடந்த 2 ஆண்டுகளாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், சிறுமியின் தாயாரிடம், அவரை திருமணம் செய்து தருமாறு விக்னேஷ் கேட்டுள்ளார். அதற்கு அவரது தாயார் விஜயலட்சுமி, 14 வயதில் திருமணம் செய்ய முடியாது, 18 வயது பூர்த்தியான பின்னர் பார்க்கலாம் என கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில், விடுமுறைக்கு ஊருக்கு வந்த இளைஞர் விக்னேஷ், சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டிற்குள் கையில் தாலியுடன் புகுந்துள்ளார். அப்போது, அவசர அவசரமாக சிறுமியை கட்டாயப்படுத்தி கழுத்தில் தாலி கட்டியுள்ளார்.

ஏதும் அறியாது தவித்த சிறுமி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு வந்த அவரது தாய் மகளுக்கு நேர்ந்த சம்பவத்தை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகி, வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில், இளைஞர் மீது கட்டாய தாலி கட்டியது, , பெண்ணை மானபங்கம் படுத்துதல், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தது, சிறுமியின் தாயை அசிங்கமான வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர், விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:லாரி மீது மோதிய கார் - இருவர் காயம்

ABOUT THE AUTHOR

...view details