திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த, வடபுதுப்பட்டு அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்த காரின் பின்பக்க டயர் வெடித்தது. அப்போது கார் அங்கிருந்த தடுப்புச் சுவர் மீது மோதி, தலைகுப்புற கவிழ்ந்தது.
விபத்துக்குள்ளானதில், கர்நாடக மாநிலம் சர்ஜாபூர் பகுதியைச் சேர்ந்த சேஷாத்திரி அவரது மனைவி மற்றும் மகன் அனிஷ் குமார் உள்பட மூன்று பேர் படுகாயமடைந்து, நூலிழையில் உயிர் தப்பினர்.
இதில் சிறுவன் அனிஷ்குமாருக்கு, இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்துக்குள்ளானதை அறிந்த அவ்வழியாக வந்த வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் வீரமணி, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, ஆறுதல் கூறி, அவர்களை அரசு மருத்துவமனைக்கு தன்னுடைய பாதுகாப்பு காரில் அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க:இரு சக்கர வாகனத்தில் கார் மோதி விபத்து - ஒருவர் பலி