தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில் தொடரும் கார் கொள்ளை!- பரபரப்பான சிசிடிவி - வாணியம்பாடி நியூ டவுன் பைபாஸ் சாலை.

திருப்பத்தூர் வாணியம்பாடியில் அடுத்தடுத்து கார் மற்றும் ஆட்டோக்கள் கண்ணாடியை உடைத்து கொள்ளையர்கள் திருட முயற்சித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் தொடரும் கார் கொள்ளை!- பரபரப்பான சிசிடிவி
வாணியம்பாடியில் தொடரும் கார் கொள்ளை!- பரபரப்பான சிசிடிவி

By

Published : Apr 17, 2022, 12:18 PM IST

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுண் பைபாஸ் சாலையில் அக்பர் அலி என்பவர் தனக்கு சொந்தமான மெக்கானிக் கடை முன்பு நேற்றிரவு காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு தூங்கச் சென்றுள்ளார்.

பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது நள்ளிரவில் கொள்ளையர்கள் காரை திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து அக்பரலி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் வாணியம்பாடி அம்பூர் பேட்டை பகுதியில் சரவணன் என்பவர் தனக்கு சொந்தமான காரை தனது வீட்டிற்கு வெளியே நிறுத்திவைத்துள்ளார்.

அப்பகுதியில் நுழைந்த கொள்ளையர்கள் சரவணன் என்பவருக்கு சொந்தமான கார் கண்ணாடியை உடைத்து காரை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர், முடியாததால் அங்கிருந்து அதே பகுதியை சேர்ந்த கௌரிசங்கர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்த டூல்ஸ் பாக்ஸ் மற்றும் சைக்கிள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வாணியம்பாடியில் தொடரும் கார் கொள்ளை!- பரபரப்பான சிசிடிவி

இதையும் படிங்க:காதல் விவகாரம்: நெல்லையில் அரசியல் பிரமுகர் கழுத்தறுத்து கொலை

ABOUT THE AUTHOR

...view details