தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (28) என்பவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 4 பேருடன் விருந்திற்காக காரில் குடியாத்தம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகேவுள்ள ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் பொழுது, திடீரென கார் ரேடியேட்டர் தண்ணீர் இல்லாமல் கொதித்து புகை வெளிவந்துள்ளது.
இதனைப் பார்த்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் காரை நிறுத்தி, காரில் இருந்தவர்களை அவசர அவசரமாக கீழே இறங்கியுள்ளார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.