சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த கேசவன். இவருடைய மூத்த மகன் விக்னேஷ் என்பவருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், கேசவனும் அவரது இளைய மகன் சிவராமகிருஷ்ணனும், ஒசூரில் உள்ள உறவினர்களுக்குத் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்னையிலிருந்து ஒசூர் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் வந்தபோது, பின்னால் சென்னையிலிருந்து இரும்பு பைப்புகள் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி கார் மீது மோதியது.
இதில் சாலையோரம் உள்ள சுமார் 5 அடி பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் காரில் சிக்கி படுகாயமடைந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களை, பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.