தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் கம்பத்தில் மோதிய கார்; நல்வாய்ப்பாக உயிர் தப்பிய குடும்பத்தினர் - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே சென்னையில் இருந்து வந்துகொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதில் நல்வாய்ப்பாக, காரில் இருந்தவர்கள் சிறு காயத்துடன் உயிர்தப்பினர்.

மின் கம்பத்தில் மோதிய கார்
மின் கம்பத்தில் மோதிய கார்

By

Published : Mar 13, 2022, 9:54 PM IST

Updated : Mar 14, 2022, 6:17 AM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பொன்னப்பல்லிப் பகுதியில், சென்னையில் இருந்து வடச்சேரி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மின்கம்பம் உடைந்து கார் மீது விழுந்ததில், மின் கம்பத்தில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு சாலையில் இருந்த முட்புதர்களில் பட்டு தீப்பற்றி எரியத்தொடங்கியது.

மின் கம்பத்தில் மோதிய கார்

உடனடியாக, காரில் இருந்தவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர், சாலையில் பரவிய தீயையும் அணைத்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: 'ஆஹா... மாற்றம் ஒன்றே மாறாதது' - புதுச்சேரி மத்திய சிறையில் இயற்கை விவசாயம் செய்யும் கைதிகள்!

Last Updated : Mar 14, 2022, 6:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details