திருப்பத்தூர்:கௌதம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் முகேஷ்வரன் (21). இவருக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி தற்போது பத்து நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
அதன் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் விஜய்பிரசாந்த் (21), முகேஷ்வரனிடம் "பெண் குழந்தை பிறந்துள்ளது. பார்ட்டி இல்லையா" எனக் கேட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து இருவரும் கௌதம்பேட்டை பகுதியில் உள்ள நகராட்சி கழிவறை முன்பு, விற்கப்படும் கஞ்சாவை வாங்கிக் கொண்டு பார்ட்டிக்கு தயாராகின்றனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறில் பார்ட்டி வைக்க வந்த முகேஷ்வரன் விஜய் பிரசாத்தை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தார்.