திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த லாலா ஏரிப் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் மீது குட்கா, கள்ளச்சாராயம் விற்பனை செய்துவந்ததாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம், நகர காவல் நிலையங்களில்நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இவரைக் காவல் துறையினர் தேடிவந்தனர்.
சில மாதங்களாக தலைமறைவாக இருந்த கிருஷ்ணன் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட வளையாம்பட்டு ஊராட்சி மன்ற ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்துள்ளார்.