தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீ கெங்கையம்மன் கோவிலில் எருதுவிடும் விழா - ஆம்பூரில் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற எருது விடும் விழா

ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது.

எருதுவிடும் விழா
எருதுவிடும் விழா

By

Published : May 28, 2022, 6:52 PM IST

திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த ஏ.கஸ்பா பகுதியில் ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் திருவிழாவையொட்டி, மாபெரும் எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, குப்பம் ஆகிய பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

கால்நடை மருத்துவர்களின் உரிய பரிசோதனைக்குப் பிறகே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்நிலையில் குறைந்த நேரங்களில் குறிப்பிட்ட எல்லைக்கோட்டினை கடந்த காளையின் உரிமையாளர்களுக்கு முதற்பரிசாக ரூ.60 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.50 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டன.

ஆம்பூர் அருகே உற்சாகத்துடன் நடந்த எருதுவிடும் விழா

மேலும், இவ்விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பொதுமக்கள் பங்கேற்றநிலையில் பாதுகாப்பு பணியில் 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுப்பட்டனர்.

இதையும் படிங்க: 'இது தாங்க திருவிழா'... இந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்..!

ABOUT THE AUTHOR

...view details