திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது. விழாவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொண்டன.
இப்போட்டியின் விதிப்படி விழா அரங்கில் இருந்து அவிழ்த்துவிடப்படும் காளைகள் குறிப்பிட்டுள்ள இலக்கை குறைந்த நேரத்தில் கடந்து ஓடினால், அது வெற்றி பெற்ற காளையாக அறிவிக்கப்படும். அதன்படி நிம்மியம்பட்டு சரவணன் என்பவர் காளைக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரமும், சோமனநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கபீர் என்பவரின் காளைக்கு இரண்டாவது பரிசாக ரூ.60 ஆயிரமும், மூன்றாம் பரிசாக மிட்டூர் பகுதியைச் சேர்ந்த செளந்தரராஜன் என்பவர் காளைக்கு ரூ.50 ஆயிரமும் என மொத்தம் 38 பரிசுகள் வழங்கப்பட்டன.