திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் கேட் பகுதியில் அமைந்துள்ள தண்டவாளத்தைக் நான்கு காளைகள் கடக்க முயன்றன. அப்போது, பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு ரயில், காளைகள் மீது மோதியது. இதில், இரண்டு மாடுகள் தலை சிதறி உயிரிழந்தன. மீதமிருந்த இரண்டு காளைகள் நல்வாயப்பாக உயிர்பிழைத்தன.
வாணியம்பாடியில் சரக்கு ரயிலில் அடிபட்டி இரண்டு காளைகள் பலி! - vaaniyabadi
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இரண்டு காளைகள் சரக்கு ரயில் மோதி உயிரிழந்தன.
வாணியம்பாடியருகே சரக்கு ரயிலில் அடிபட்டி இரண்டு காளைகள் பலி
உயிரிழந்த மாடுகளின் உடல்கள் எஞ்சினில் சிக்கியிருந்ததை அறிந்த ஓட்டுநர், ரயிலை நிறுத்திவிட்டார். இதன்பிறகு அப்பகுதியில் இருந்த சிலர் காளைகளின் உடலை அப்புறப்படுத்திய பின்பு 15 நிமிடங்கள் கழித்து சரக்கு ரயில் கிளம்பியது. இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவலர்கள் வழக்குப்பதிவு செய்து காளைகளின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சுகாதார அலுவலக ஊழியர்கள் 12 பேருக்கு கரோனா தொற்று!