திருப்பத்தூர் அடுத்த ஆவல்நாய்க்கன்பட்டி சோளச்சூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரின் மகன்கள் கோவிந்தராஜ் (42), கனகராஜ் (40). இவர்கள் மரம் ஏறும் தொழில் செய்துவந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு (ஜனவரி 12) தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்து கனகராஜன் மனைவி பூங்கொடி (39) பூ கட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது குடிபோதையில் வந்த கோவிந்தராஜ் வழியிலேயே அமர்ந்துகொண்டிருந்த பூங்கொடியிடம் தன்னுடைய வீட்டிற்குச் செல்ல வழிவிடுமாறு கேட்டுள்ளார்.
இது சம்பந்தமாக இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் குடிபோதையிலிருந்த கோவிந்தராஜ் பூங்கொடியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து நடந்த சம்பவங்களை தன்னுடைய கணவர் கனகராஜிக்கு பூங்கொடி போன் செய்து கூறியவுடன், கோபத்தின் உச்சத்தில் வீட்டிற்கு வந்த கனகராஜும் கோவிந்தராஜை மரமேறி கிளைகளைக் கழித்துவிடும் கத்தியால் வெறித்தனமாக வெட்டியுள்ளார்.