திருப்பத்தூர்: ஆம்பூர் புறவழிச்சாலையில் அரசு மதுபானக் கடையுடன் கூடிய டாஸ்மாக் பார் இயங்கி வருகிறது. இங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை மர்ம நபர்கள் சேதப்படுத்திவிட்டு, மதுபானக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் நேற்று (ஜன.1)ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு பணம் ஏதும் இல்லாததால் அருகில் இருந்த டாஸ்மாக் பாரின் பூட்டை உடைத்து 25 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து இன்று (ஜன.2) காலை டாஸ்மாக் பாரினை திறக்க பணியாளர்கள் வந்தபோது பாரின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு ஆம்பூர் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.