தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போர்வெல் இயந்திரம் மின் கம்பியில் உரசி விபத்து: ஓட்டுநர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு! - current shock death vanniyanathapuram

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த வன்னிநாதபுரம் பகுதியில் போர்வெல்லில் ஏற்பட்ட பழுதை நீக்க வந்த போர்வெல் இயந்திரம், உயர் அழுத்த மின் கோபுர மின் கம்பியில் உரசியதால் இயந்திரத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு  போர்வெல் இயந்திரம் மின் கம்பியில் உரசி விபத்து  current shock death  current shock death vanniyanathapuram  வன்னியநாதபுரம்
பேர்வெல் பழுது பார்க்கும் இயந்திரத்தின் ஓட்டுநர் மேத்யூ மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

By

Published : Feb 25, 2020, 4:57 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வன்னியநாதபுரம் பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த அறிவொளி என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அங்கிருந்து பழுதான போர்வெல்லை, பழுது பார்க்க வந்த போர்வெல் பழுதுபார்க்கும் வாகனம், விவசாய நிலத்தில் மேலே செல்லும் உயர் மின்னழுத்த மின் கம்பியில் உரசியது.

இதில், மின்சாரம் தாக்கி நரியம்பட்டு பகுதியைச் சேர்ந்த போர்வெல் வாகன உரிமையாளரும், ஓட்டுநருமான மேத்யூ என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மேத்யூவின் மகன்களான சஞ்சய் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பேர்வெல் பழுது பார்க்கும் இயந்திரத்தின் ஓட்டுநர் மேத்யூ மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

முன்னதாக, மின்சாரம் தாக்கியதில் போர்வெல் பழுது பார்க்கும் வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அங்கிருந்த அனைவரும் அச்சம் அடைந்து ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த உமராபாத் காவலர்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:நாமக்கல் எம்எல்ஏ-வின் தாயார் மறைவு - நேரில் சென்று துக்கம் விசாரித்த முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details