திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் பெங்களூரு-சென்னை ரயில்வே மார்க்கத்தில் 25 வயது இளம் பெண் உடல் கிடப்பதாக ஜோலார்பேட்டை இருப்புப்பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து, உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பெண்ணின் முகம் முழுவதும் சிதைந்த நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்துவருகிறது.