தமிழ்நாடு

tamil nadu

வேலூர் தென்புதுப்பட்டு கிராமத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

By

Published : Aug 23, 2022, 6:29 PM IST

வேலூர், தென்புதுப்பட்டு கிராமத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் பஸ்ஸை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் கேட்டு சாலை மறியல்
குடிநீர் கேட்டு சாலை மறியல்

வேலூர் மாவட்டம்,ஒடுகத்தூர் அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இவ்வூரில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி தற்போது முற்றிலும் பழுதாகியுள்ளதால், அதனை அகற்ற வேண்டி கடந்த 2 ஆண்டுகளாக அரசு அலுவலர்களிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஆட்சிக்காலத்தில் ஜல்ஜூவன் திட்டத்தின்மூலம் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கும் இலவச குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவ்வாறு அமைக்கப்பட்ட குழாய்கள் அனைத்தும் முறையாக அமைக்கப்படாததால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; இதனால் ஒப்பந்தப்பணி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; முறையான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டு அவ்வழியாக செல்லும் தனியார் பஸ்ஸையும் அப்பகுதியினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அலுவலர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

குடிநீர் கேட்டு சாலை மறியல்

இதையும் படிங்க:சிறுமி டான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை...10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் 8 மணி நேர சிகிச்சை....

ABOUT THE AUTHOR

...view details