தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் சிலையின் பக்கத்திலேயே பாஜக கொடி - bjp flag

திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் காணாமல் போன பாஜகவின் கொடி கம்பத்தை கண்டுபிடித்து பெரியார் சிலைக்கு பக்கத்திலேயே, போலீஸ் பாதுகாப்புடன் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

பாஜக
பாஜக

By

Published : Sep 22, 2020, 10:54 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலையில் அத்தனாவூர் பஸ் நிலையம் அருகில் பெரியார் சிலைக்கு பக்கத்திலேயே பாஜக கொடி ஏற்றி மோடியின் பிறந்தநாள் கொண்டாட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், கட்சி நிர்வாகி தனக்கு பதவி கொடுக்கவில்லை என்கிற காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இரவோடு இரவாக கொடிக்கம்பத்தை திருடிச் சென்றுள்ளார்.

பின்பு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர் உதவியுடன் அதே கொடி கம்பம் மீட்கப்பட்டது. இதனையடுத்து, அதே இடத்தில் பெரியார் சிலைக்கு அருகிலேயே சோலையார்பேட்டை கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட துணைத்தலைவர் சி.கவியரசு தலைமையில் கொடியேற்றப்பட்டது.

அப்போது, பாரத் மாதா கி ஜே, இரும்பு மனிதர் நரேந்திர மோடி வாழ்க, போன்ற கோஷங்களை எழுப்பி. இனிப்பு வழங்கி அன்னதானம் வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details