திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (32). இவர் பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவராக உள்ளார். இவர், கடந்த 11 மாதத்திற்கு முன்பு தர்மபுரியை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த திரட்சிகா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் சீனிவாசன் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மின்னூர் கிராம தலைவர் பதவிற்கு போட்டியிட்டு தோல்வியுற்றுள்ளார். இதனை தொடந்து கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும் சீனிவாசன் தனது மனைவி திரட்சிகாவை கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாதி பெயர் சொல்லி கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயங்களுடன் திரட்சிகா தனது சொந்த ஊரான தர்மபுரிக்கு சென்றுள்ளார்.