தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து! - திருப்பத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து

திருப்பத்தூர்: தாராபுரம் நகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து வைக்கப்பட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து
தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து

By

Published : Apr 24, 2020, 3:38 PM IST

கரோனா தொற்றை தடுக்கும் முயற்சியில் நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக செயலாற்றுகின்றனர். அவர்களை பொதுமக்கள் அனைவரும் கவுரவித்து பாராட்டிவருகின்றனர்.

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தாராபுரம் நகராட்சி சார்பில் அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் இன்று 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு பிரியாணி விருந்து வைக்கப்பட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து

இந்நிகழ்ச்சியை துணை ஆட்சியர் பவன்குமார் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கியதோடு அவரும், அவர்களோடு அமர்ந்து உணவருந்தினார். இச்சம்பவம் தூய்மைப் பணியாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: இலவசமாக பாத அழுத்த சிகிச்சை... தூய்மைப் பணியாளர்களின் வலி போக்கும் வாலிபர்!

ABOUT THE AUTHOR

...view details