திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் அம்பிகா. இவர் தனது மகன் அறிவழகனுடன் வாணியம்பாடி நியூடவுன் நாஸ்கர் பகுதியில் வசித்து வருகிறார்.
நேற்று (ஆக.23) இரவு வீட்டின் வாசலில் அறிவழகன் 1.50 லட்சம் மதிப்பிலான தனது ராயல் என்ஃபீல்ட் புல்லட் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இன்று (ஆக.24) காலை அவர் வீட்டின் வாசலில் வந்து பார்த்துபோது அந்த வாகனம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதே போல் அதே தெருவில் தப்ஸீர் என்பவர் வீட்டின் முன்பு நிற்க வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனமும் திருடப்பட்டுள்ளது.