தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: மதுப்பிரியரால் நேர்ந்த விபரீதம்! - திருப்பத்தூரில் இருசக்கர வாகன விபத்து

திருப்பத்தூர்: முன்னர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது குடிபோதையில் பின்னால் சென்ற இருசக்கர வாகன ஓட்டி, மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bike accident
Bike accident

By

Published : Aug 31, 2020, 8:59 AM IST

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலை சின்னக்கடைத் தெரு அருகே முன்னர் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது குடிபோதையில் பின்னால் சென்ற இருசக்கர வாகன ஓட்டி, மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

இந்த விபத்தில் முன்னர் சென்ற புதுபூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் பின்னால் வந்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த இளையராஜா (22) படுகாயத்துடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: செல்போன் கடையில் ஐஸ்கிரீமை சுவைத்தவாறு கூலாகத் திருடிய திருடர்கள்!

ABOUT THE AUTHOR

...view details