திருப்பத்தூர்: வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியைச் சேர்ந்தவர் சையத் அஸ்லம். இவர் பிஜேஎன் சாலையில் எலக்ட்ரிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சையத் சாலிம், அவருடைய தந்தையின் கடை அமைந்துள்ள பகுதியில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடை முன்பு தனது சைக்கிளை நிறுத்திவிட்டு கண் கண்ணாடி கடைக்கு உள்ளே சென்றுள்ளார்.
பின்னர் வெளியே வந்து பார்த்தபோது சைக்கிள் காணாமல் போனது தெரியவந்தது. பின்னர் அருகில் ஒரு கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தார். அப்போது, இரண்டு இளைஞர்கள் சைக்கிளை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சையத் சாலிம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.