தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு! - tirupathur news

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே ஒரு வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு!
திருப்பத்தூரில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு!

By

Published : Dec 22, 2020, 2:06 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் - புனிதாவிற்கு ஒரு வயதில் ரஷீத் என்ற ஆண் குழந்தை இருந்தது.

இவர்களது வீட்டின் முன்பு ஐந்து அடி ஆழம் கொண்ட தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டி உள்ளது. ரஷீத்தின் பாட்டி தொட்டியின் மூடி அப்புறப்படுத்திவிட்டு தண்ணீர் எடுத்து கொண்டு தொட்டியின் மேல் பரப்பில் உள்ள முடியை மூடாமல் சென்றுள்ளார்.

அப்போது, விளையாடிக் கொண்டிருந்த ரஷித் , ஐந்து அடி ஆழமுள்ள தொட்டிக்குள் எதிர்பாராதவிதமாக விழுந்துள்ளான். இதனையறிந்த பெற்றோர் தொட்டிக்குள் இறங்கி குழந்தையை தூக்கிக் கொண்டு திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.அப்பொழுது பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.

குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழும் காட்சி நெஞ்சை உருக்கியது. இதுதொடர்பாக நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். கவனக்குறைவால் தொட்டியின் மூடி மூடாமல் ஒரு குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...‘என் சாவுக்கு காரணம் மனைவி’ - எழுதி வைத்துவிட்டு தொழிலாளி தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details