திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே காதர்பேட்டை ஈத்கா மைதானத்தில் நேற்று (மே 03) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அந்த நேரத்தில் அவ்வழியாக சாலையில் நடந்து சென்ற இஸ்லாமிய பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் உடனடியாக அப்பெண்ணை மீட்டு குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கினார்.