திருப்பத்தூர்:வாணியம்பாடியில் காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அஸ்லம் பாஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக அரசு கடந்த 8 ஆண்டுகளாக ராமர் கோயில், பாபர் மசூதி பிரச்சினையை கையில் எடுத்து இந்துவாதத்தை மக்கள் மீது தூவி 2024ஆம் ஆண்டு ஆட்சியில் அமர திட்டம் வகுத்து வருகின்றனர்.
மேலும், மத்திய பிரதேசத்திலுள்ள பள்ளி வாசலில் இஸ்லாமியர்கள் தொழுகையின்போது ராம நவமி என்ற பண்டிகையை கொண்டாடி இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் நேரத்தில் ஒலி பெருக்கியின் மூலம் இடையூறு ஏற்படுத்தினர். மேலும், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு, தாக்குதல் நடத்தினர்.