திருப்பத்தூர்மாவட்டம், ஆம்பூர் பஜார் பகுதியில் அமைந்துள்ள பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் Arjun Sampath சிறப்புத் தரிசனம் மேற்கொண்டர்.
சுவாமி தரிசனம் செய்த பிறகு திமுக எதிர்ப்பாளர்கள் Maridhas மீதான வழக்கை ரத்து, இதே போல கிஷோர் கே சாமி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், ஃபேஸ்புக் பதிவாளர் பிபின் குமார் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் இருந்து, அவருக்கு பிணை வழங்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாகப் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத் கூறியதாவது, "மாரிதாஸ் ஒரு ஹீரோ, அதற்கு அடுத்து கே சாமி அவ்வாறு இருக்கிறார்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.
இது வரவேற்கத்தக்கது
இவ்வுலகில் யூ-ட்யூபர் மாரிதாஸ் மீது பதியப்பட்டு இருந்த வழக்குகளிலிருந்து அவர் பிணை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும்; அதேபோல் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திமுக எதிர்ப்பாளர் கிஷோர் கே சாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.