திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அப்பல்லோ மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முகக்கவசம்(மாஸ்க்) விற்பனை செய்து வந்துள்ளனர்.
மூன்று லேயர் முகக்கவசம், இரண்டு லேயர் முகக்கவசம், மஞ்சள் முகக்கவசம் என பல்வேறு முகக்கவசங்களை விற்பனை செய்துள்ளனர். ஐந்து ரூபாய் முகக்கவசம் 20ரூபாய் முதல் 30ரூபாய் வரையிலும், 30ரூபாய் முகக்கவசம் 70ரூபாய்க்கும், 50ரூபாய் முகக்கவசம் 100ரூபாய் என விற்பனை செய்துள்ளனர்.