திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசினர் தோட்ட வளாகத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு தினந்தோறும் நடைபெறும் பத்திரப்பதிவு தொடர்பான பணிகளுக்காக அலுவலகப் பணியாளர்கள் கையூட்டுப் பெறுவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தது.
இந்நிலையில், நேற்று மாலை (டிச.14) லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ஹேமா சித்ரா தலைமையிலான அலுவலர்கள் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.