தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் விலையை 35 ரூபாயாக குறைக்க மத்திய அரசு தயார் - அண்ணாமலை - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மத்திய அரசு பெட்ரோல் விலையை 35 ரூபாயாக குறைப்பதற்குத் தயாராக இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பெட்ரோல் விலையை 35 ரூபாய் குறைக்க தயார்
மத்திய அரசு பெட்ரோல் விலையை 35 ரூபாய் குறைக்க தயார்

By

Published : Oct 4, 2021, 11:01 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த ராஜக்கல் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சங்கீதாவை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (அக்.4) அழிஞ்சிகுப்பம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, "மத்திய அரசு பெட்ரோல் விலையை 35 ரூபாயாக குறைப்பதற்குத் தயாராக இருக்கிறது. ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் விலை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசு பெட்ரோல் விலையை 35 ரூபாய் வரை குறைக்கத் தயார்

திமுக ஆட்சிக்கு வந்து 5 மாதங்களாகிறது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? பெண்களுக்கு மாதம் ரூ.1,000 கொடுத்தார்களா?. கல்விக்கடன், நகைக்கடன் ரத்து என்றார்கள் எதையும் செய்யவில்லை. அதனால் திமுகவுக்கு ஓட்டுப் போடாதீர்கள்.

2023ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம், குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள பாலாற்றைப் பாழாக்கி விட்டார்கள். ஜல் ஜீவன் திட்டம் மூலம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை, இந்தப் பகுதிக்கு பாஜக அரசு கொண்டு வரும்" என்றார்.

இதையும் படிங்க:யோகி ராஜினாமா செய்யவேண்டும் - திருமாவளவன் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details