திருப்பத்தூர்:ஆம்பூர் ரஜினி ரசிகர்கள் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து கொடுக்கும் நபர்களுக்கு அண்ணாத்தே திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட உடன் உற்சாகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் சிலர் மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து கொடுத்து சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர். மேலும் சுமார் 100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை பெற்றுக்கொண்ட ரஜினி ரசிகர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்தவர்களுக்கு டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.