திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் சுமார் 126 தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவருகின்றனர். இங்கு நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை மேற்பார்வையாளர் பி. ரமேஷ் சுமார் 12 ஆண்டுகளாக நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்துவருகிறார்.
மேற்பார்வையாளர் ரமேஷ், அநாகரிகமாய் பேசுவது, ஒருமையில் பேசுவது, அவதூறாகப் பேசுவது எனப் பணியாளர்களிடம் நடந்துகொள்கிறார். இவருக்கு இதற்கு முன்னரே ஒரு பணியிட மாற்றம் அளித்தார்கள்.
ஆனால், பணத்தின் மூலம் அங்கு செல்லாமல் சரிசெய்துவிட்டார். ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க எத்தனை கடிதத்தை பணியாளர்கள் அனுப்பியுள்ளார்கள். இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல், ரமேஷ் அரசின் டீசல், பெட்ரோல், ப்ளீச்சிங் பவுடர், கிருமி நாசினியை வெளியே விற்று லாபம் பார்த்து பணம் சேமித்துவருவதாகவும் கூறப்படுகிறது.
தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்! அதேபோல், துப்புரவு ஆய்வாளர் உமா சங்கர் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவருகிறார். இவர் பணியாளர்களை மிகவும் அவதூறாகப் பேசுவது மட்டுமல்லாமல், அரசு பொருள்களை வெளியே விற்பனை செய்து பணம் சம்பாதித்துவருவதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஜோலார்பேட்டை தூய்மைப் பணியாளர்கள் நேற்று (ஜூன் 17) திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் ராமஜெயம் சம்பவ இடத்திற்கு விரைந்து பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பணியாளர்கள் ரமேஷ், உமாசங்கர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அது மட்டுமின்றி நான்கு ஆண்டு காலமாக ஊதியத்தை அதிகரிக்கவில்லை என்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சமாதானம் ஏற்படுத்தியதின் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் கலைந்துசென்றனர்.