தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி உயிரிழப்பு! - old woman dies after being strangled and sexually abused

திருப்பத்தூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மூதாட்டியை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து நெரிக்கப்பட்டு நிலையில் மூதாட்டி உயிரிழப்பு
திருப்பத்தூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து நெரிக்கப்பட்டு நிலையில் மூதாட்டி உயிரிழப்பு

By

Published : Jun 30, 2022, 4:20 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரவு காவலர் ஒருவர், பணிக்குச் சென்றிருந்த நிலையில் அவருடைய மனைவி வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக இவர் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே தனியாக உறங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை இரும்புக்கம்பியை போட்டு இறுக்கி, கொலை செய்துள்ளனர்.

இந்த நிலையில் காலை அக்கம்பக்கத்தினர் மூதாட்டி இறந்து கிடப்பதை அறிந்து கந்திலி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச்சென்று மூதாட்டி உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்கள் பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 50 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தூங்கும்போது ஏற்பட்ட விபரீதம் - ஜேசிபி இயந்திரத்தில் சிக்கியவர் மருத்துவமனையில் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details