திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் வடகிழக்குப்பருவமழை கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர்மழை பெய்து வருகிறது.

இப்பகுதியில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மாதனூர், சோலூர், விண்ணமங்கலம், தேவலாபுரம், உமராபாத் உள்ளிட்டப் பகுதிகளில் மாலையில் திடீரென சுமார் ஒருமணி நேரமாக கனமழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் பெய்து வரும் தொடர்மழையால், நீர் நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு - பாதிவழியில் நின்ற கைதானவர்கள் இருந்த காவல் துறை வாகனம்; நடந்தது என்ன?