திருப்பத்தூர்:ஜோலார்பேட்டை திமுக ஒன்றியச் செயலாளர் காசி தலைமையில், திமுக உறுப்பினர்கள் பலர் முன்னாள் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். ஜோலார்பேட்டையில் உள்ள ஆர்.எஸ் திருமண மண்டபத்தில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திமுக உள்பட பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியை மேடையில் பேசிய கே.சி.வீரமணி, "தேர்தல் காலத்தில் திமுகவினர் சந்தர்ப்ப சூழ்நிலையால், பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றனர்.